2
நேரம் காலை எட்டு மணி.. இடம் பிரியாவின் வீடு
எங்கடீ இருந்தா இத்தனை நாளா.. இதுக்குதான் நான் இத்தனை நாளா வெயிட் பண்ணேனா.. ச்ச.. சான்சே இல்ல.. ன்னு மனசுக்குள்ள அவளை பார்த்து ஜொள்ளு ஜொள்ளா ஒழுகிட்டு சபை நாகரீகத்தை கருதி பார்வையை இடம் மாற்றினான்..
பாப்பா என்ன படிச்சி இருக்கான்னு சொன்னீங்க.. ,இது ஹரியின் அப்பா ராஜேந்திரன் அசிஸ்டன்ட் மேனேஜர் இந்தியன் வங்கி
எம்எஸ்சி எம்பில்.. கதிரவன் காலேஜுலே லேக்செரரா வொர்க் பண்றா .. இது ப்ரியாவின் அப்பா குமரேசன் புரபசர்
பையன் என்ன பண்றார்.. நீங்க போன்ல சொன்னது சரியா கேக்கல - இது ப்ரியாவின் அம்மா மல்லிகா இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்
நானே சொல்றேங்க.. எம்டெக் அண்ட் எம்பிஏ முடிச்சிட்டு சாப்ட்வார் கம்பனில புராடக்ட் மேனஜரா இருக்கேன்.. வருஷத்துக்கு பதினெட்டு லட்சம் சம்பாதிக்கறேன்.. இப்பதான் ஒரு அப்பர்ட்ட்மென்ட் புக் பண்ணி இருக்கேன்.. நிறைய வெளிநாடு வேலை வந்தது.. ஆனா அப்பா அமாவை விட்டு தனியா போக பிடிக்கல. அதான் சென்னையிலே இருக்கேன்.. சென்னையில தான் இருப்பேன்.
அது எப்படி ஆன்சைட் , பிசினர் டிரிப் அது இது ன்னு வந்தா போய்தானே ஆகணும். இன்பெக்ட் எனக்கும் சென்னை ல இருக்கிறதுதான் பிடிக்கும்.. இப்படி பளிச்சென்று கேள்வி கேட்ட பிரியாவை இன்னும் கொஞ்சம் பிடித்தது ஹரிக்கு.. ஜொள்ளு ஒரு கேலன் ல இருந்து இரண்டு கேலனா ஆச்சு
பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்குங்க.. .. இது ஹரியின் அம்மா லீலா பள்ளி ஆசிரியை..
ரொம்ப சந்தோசங்க.. எங்களுக்கும் தம்பிய ரொம்ப பிடிச்சி இருக்கு.. உங்களுக்கு விருப்பம்னா மேல தொடரலாம்.. ன்னு குமரேசன் சொல்லவும்.. இடைமறித்த பிரியா.. அப்பா நான் கொஞ்சம் அவர் கிட்ட பேசணும்..
அப்கோர்ஸ் மா.. டேய் ஹரி.. போயி பேசிட்டு வாடா.. ன்னு ராஜேந்திரன் சொல்ல..
பப்ளிக் டாய்லட்ல கியுவுல நிக்கிறவன் கத தொறந்த உடனே ஓடுற மாதிரி ஹரி எழுந்து நின்னான்.. அவனோட அவச குடுக்கை தனத்த பாத்து எல்லாரும் குனிஞ்சி சிரிக்க.. ராவ அடிச்ச மாதிரி லைட்ட நெளிய ஆரம்பிச்சான்..
இருவரையும் பால்கனிக்கு அனுப்பிட்டு பெரிசுங்க.. எப்படி சொந்தம். எந்த வழில சொந்தம் ன்னு பேச ஆரம்பிக்க.. அங்கே ஜொள்ளு மன்னன்.. வாய்க்குள்ள கரண்டிய தேடிக்கிட்டு இருந்தான்.. எதுக்குன்னு கேக்குறீங்களா.. பின்ன கடலைய வறுக்கு ஆரம்பிக்கணும் இல்ல.. அதுக்குதான்..
பிரியாவே தொடர்ந்தாள்.. சொல்லுங்க ஹரி.. அவள் பேச்சில் தெரிந்த நளினம் ஹரியை மிகவும் கவர்ந்தது.. நீ பாடம் எடுத்தா எவன் பாடத்த கவனிப்பான்.. எல்ல்லாம் உன்னையத்தான் பாப்பான்..
சரி நானே சொல்றேன்.. நான் லேடீஸ் காலேஜுல வொர்க் பண்றேன்.. ன்னு அவ சொன்னதும்..
நாம மனசுல நினைச்சதுக்கு பதில் சொல்றாளே.. சரி டா ஹரி.. கொஞ்சம் சீர்யஸா இரு ன்னு மனசுக்குள்ள லேசாக கருமிக்கொண்டான்..
சரிங்க.. பிரியா.. நான் நேரிடையா கேக்குறேன்.. உங்களுக்கு என்னைய பிடிச்சி இருக்கா.. இப்பவே சொல்றேன்.. நான் தம் அடிப்பேன்.. பார்ட்டி டிரிங்கர்.. மத்தபடி நிறைய பிரண்ட்ஸ்.. அதுல நெருக்கமானவங்க சொச்சம் பேர்தான்.. தமயந்தி மாதிரி.. பெரிசா சொல்லிக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல.. நான் விஐடி ல படிச்சேன்.. 2004 BE பாஸ்ட் அவுட்.. அண்ட் 2006 ல ME கம்பிலீட் பண்ணேன்.. ரெண்டுமே அங்கதான் படிச்சேன்..
தெரியும்ங்க.. நானும் அங்கதான் படிச்சேன்.. நான் 2008 ல எம்எஸ் சி பாஸ்ட் அவுட்.. பேச்சிலர் மாஸ்டர் ரெண்டுமே அங்கதான் பண்ணேன்.. உங்கள ரிவேரா பங்கசன் ல பாத்து இருக்கேன்..
அட.. ஆச்சர்யமா இருக்கே.. நாமே ரெண்டு பேரும் ஒரே காலேஜா.. சான்சே இல்லீங்க..
ஏன் என்ன ஆச்சு..
இல்லீங்க நான் இத எதிபார்க்கவே இல்ல.. லாஸ்ட் இயர் அலுமினி க்கு வந்து இருந்தீங்களா.. ?
வந்தேனே.. அங்கேயும் உங்கள பாத்தேன்.. சேம் டைம் எங்க ஆர்ட் அண்ட் சயின்ஸ் காலேஜுல அலுமினி இருந்தது..
அட.. என்னால நம்பவே முடியல.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. இன்னைக்கும் எல்லா பிரண்டுசுங்க கிட்டேயும் சொல்ல போறேன்..
சரிங்க.. இப்ப விஷயத்துக்கு வருவோம்.. எனக்கு கட்டுப்பாடு போடறது பிடிக்காது .. எனக்கு இன்னும் மேல படிக்கணும்.. என்னோட சுதந்திரம். என்னோட உரிமை எனக்கு வேணும்.. ஆனா ஒரு மனைவியா என்ன பண்ணனும்.. எப்படி நடந்துக்கணும்.. குடும்பத்த பாத்துக்கணும்.. இப்படி எல்லா விஷயத்தையும் எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பேன்.. அப்புறம் நான் ஒரே பொண்ணு.. எங்கப்பா அம்மாவை நான்தான் கடைசி வரைக்கும் பாத்துக்கணும்..
அட.. இவ்ளோதானா.. எவ்ளோ வேணுமினாலும் படிங்க.. ஆனா என் கிட்ட மனப்பாடம் பண்ணி காட்டுறேன் சொல்லி என்னைய இம்சை படுத்த கூடாது.. ஒரு புருசனா லட்சணமா என்ன பண்ணனும் எனக்கு தெரியாது.. அத எங்கப்பா கிட்ட கேட்டு தெரிஞ்சு அதுபடி நடந்துக்கறேன்.. ன்னு ஹரி சொன்னதும்..
ப்ரியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தவள்.. சைனீஸ் மணி ஒன்றோடு ஒன்றோடு உரசியது போல
இருந்தது.. மெதுவாக அடங்கியவள்..சரி மேல சொல்லுங்க..
நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க..
நீங்க பேச பேச கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு ன்னு பிரியா பதிலுக்கு வழிய.. பால்கனியில் ஒரே எச்சில் மழை..
இருவருக்கும் ரஜினி, கமல், இளையராஜா என வழக்கம் போல பிடித்தவைகளை பகிர.. இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி வெகுவாக குறைந்து இருந்தது..
இந்த பொண்ணு பக்கர மீட்டிங் எதுக்கு காலங்கார்த்தால பிக்ஸ் பண்ணீங்க..
இல்ல.. நானும் காலேஜ் போகணும், அம்மாவுக்கும் லீவு இல்லை, உங்க அப்பாவுக்கும் லீவு இல்லை ன்னு சொன்னங்க.. அதோட இன்னைக்கு ரொம்ப நல்லா நாளாம்.. அதானால்தான் காலைல பிக்ஸ் பண்ணாங்க.. ஏன் உங்க அம்மா உங்க கிட்ட சொல்லலியா..
சொல்லலியா.. ப்ரியா நேத்து நைட்லேர்ந்து படுத்தி எடுத்திட்டாங்க.. காலைல சீக்கிரம் எழுந்திரு, குளிச்சி ரெடியகிறு. அது இதுன்னு.. எனக்கு காலைல தூக்கம் தானா கலையனும்.. யாரவது எழுப்பினா கடுப்பாகிருவேன்.. ஆனா என்ன பண்ணறது.. வேற வழி இல்ல..
அட.. எனக்கும் காலிலே நானே எழுந்துக்கணும்.. ஆனா நான் ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்..
ஐயோ.. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கு எழுந்து என்ன பண்றது.. சான்சே இல்ல.. எனக்கு அபீஸ் டேஸ்ல ஒன்பது மணிக்கு எழுவேன். லீவ் நாள்ன்னா ஒரு பனிரெண்டு மணிக்குதான்..
ஆறு மணி உங்களுக்கு நாடு ராத்திரியா.. சரியா போச்சு.. எனக்கு உங்கள சரி பண்ற வேலையே நிறைய இருக்கும் போல இருக்கே..
அதுக்கு என்ன காலைல ஒரு ஷோ வச்சிக்கலாம்.. சீக்கிரம் எழுந்திருவேன்.. ஹ.. ஹஹா.. ன்னு கேவலமா ஒரு ஜோக் அடிச்சி அவனே சிரிக்க..
முகம் பூரா ரத்த கலர்ல சிவந்து பிரியா.. ஸ்டாப் இட் ஹரி.. எனக்கு இந்த மாதிரி வல்கரா பேசறது பிடிக்காது.. எவ்ளோ குளோசா இருந்தாலும் பேச்சுல ஒரு நாகரீகம் இருக்கணும்.. இதுக்கு மேல இப்படி பேசாதீங்க.
அசடு வழிய.. சரி பிரியா.. நான் கேசுவல பேசுற மாதிரி பேசிட்டேன்.. மன்னிச்சுக்க.. நான் கண்ட்ரோல் பண்ணிக்கறேன்.. ன்னு சொல்ல. பிரியாவோ.. சரி.. சரி.. நாம இப்பதான் பாத்து இருக்கோம்.. அதுக்குள்ளே அப்படி எல்லாம் பேசினது எனக்கு பிடிக்கல.. நானும் கொஞ்சம் கோவமா பேசிட்டேன் சாரி ன்னு சொல்ல இருவரும் சமாதனம் ஆனாங்க.. அடுத்து என்ன பேசுறது ன்னு தெரியாம இருவும் முழிக்க.. ஹரியே ஆரம்பித்தான்..
ப்ரியா.. ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு.. கொஞ்சம் பிரஷ் ஆகணும்.. கேக்க..
அதோ அங்க இருக்கு.. வாங்க ன்னு கூட்டிட்டு போக.. உள்ளே சென்றவன் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து காரி துப்பிக்கொண்டான்
கருமம் புடிச்சவனே.. கொஞ்சம் வெயிட் பண்ண கூடாத.. இப்படி சொதப்பிட்டியே.. சரி.. இதுக்கு மேல கொஞ்சம் கேர் புல்லா இருன்னு தன்னை தானே தேற்றிக்கொண்டவன்.. வெளியே வந்தான்.. பால்கனில நின்று வானத்தை பார்த்து தன் தலை முடியை விலக்கி கொண்டு விரிந்த விழிகளில் தெரிவை அளந்து கொண்டு இருந்த பிரியாவை கண்டான்.. அவளும் திரும்பி இவன பாக்க.. மறுபடியும் கதவை மூடி உள்ளே வந்தவன்
தறுதலை.. தறுதலை.. சுச்சா முட்டினதுன்னு தானே வந்த அத போகாம போற.. ன்னு சொல்லியவாறே வேலைய தொடர்ந்தான்..
வெளியே வந்தவனுக்கு பிரியா அங்க கோடியில் இருக்கும் ஒரு டவலை எடுக்க செல்ல.. அதற்குள் அங்கே சோபாவில் இருந்த ஒரு துண்டை எடுத்து தன் கைகளை துடைத்தான்..
டவளோட வந்த ப்ரியாவுக்கு இவன் செய்கை கொஞ்சம் எரிச்சலை குடுத்தது..
என்னங்க நீங்க.. நான்தான் டவல் எடுத்து வரேனே.. அதுக்குள்ளே என்ன அவரசம்.. அது என்னோட டவல்..
சோ வாட் பிரியா..ஐ ஜஸ்ட் கிலீன்ட் இட் ஆல்ரெடி..
இல்லைங்க.. தட்ஸ் மை ஹாபிட்.. என்னோட பொருளை வேற யாரும் யூஸ் பண்ண கூடாது.. மத்தவங்களோட பொருளையும் நான் தொட மாட்டேன்.. சின்ன வயசுல இருந்து பழக்கம்.. ஐ ஹேட் பீப்பிள் யுசிங் மை திங்க்ஸ்..
ஐயோ .. சரி ப்ரியா சாரி.. ஐ வில் கீப் இன் மை மைன்ட்.. சாரி பார் திஸ்..
பரவா இல்லை.. நான் இந்த மாதிரி விஷயத்துல அடமென்ட்..
ஒ., இதுதான் உங்க சுதந்திரத்துல தலையிட கூடாதுன்னு நீங்க சொன்னதோ.. ன்னு ஹரி கேன தனமா கேக்க.
கோவமான அவளோட முகம் பட்டென்று சிரித்த முகமாகியது.. ஒரு நிமிடம் இடைவெளி விடாமல் சிரித்தவள்.. எவ்ளோ கோவம் வந்தாலும் நீங்க பேசி பேசியே சிரிக்க வச்சுடுறீங்க.. ன்னு சொல்லி சிரித்து முடிக்க..
தட்ஸ் மை ஹாபிட் பிரியா.. ன்னு பெருமையா சொல்ல..
எனக்கும் உங்கள் ரொம்ப பிடிச்சி இருக்கு ஹரி.. ஐ தின்க் நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்து போகுது.. எனக்கு ஏதாவது பிடிக்காட்டியும் நீங்க ஒத்துப்போறீங்க.. இத வச்சி எல்லாத்துலேயும் சரியா இருக்குமுன்னு சொல்ல முடியாது.. ஆனா நானும் உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்.. நானும் விட்டுக்கொடுத்து போகணும்.. கண்டிப்பா முயற்சி பண்றேன்.. ன்னு சொல்ல..
இருவரும் மேலும் பேச துவங்கினர்..
ஹரி ப்ரியாவை ஜோல்லிக்கொண்டு கொண்டு இருந்தான்.. பிரியா ஹரியை ரசித்துக்கொண்டு இருந்தாள்.. இதற்கிடையில் ஹரிக்கு வந்த அத்தனை போன் கால்களையும் கண்டுக்கொள்ளவே இல்லை.. மொத்தம் பத்து மிஸ்ட் கால்.. இருபது மெசேஜ்.. அதில் பாதி தமயந்தியிடமிருந்து..
பிரியாவிடம் பேசிக்கொண்டே தமயந்திக்கு ரிப்ளை செய்தான்..
பேசினார்கள்.. பேசினார்கள்.. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள்..
ஹரி. பிரியாவை பிர்யா மனமில்லாமல்.. அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்..
ப்ரியா.. ஹரியிடம் கிட்டத்தட்ட மயங்கிவிட்டாள்..
இருவரின் பேச்சுக்களை இடைமறித்து
என்னப்பா. பேசிட்டீங்களா.. ன்னு பரியாவின் அப்பா கேக்க..
பேசிக்கிட்டோ இருக்கோம் பா..
இதுக்கு மேல உங்களுக்கு பிடிச்சி இருக்கா.. இல்லையானு நாங்க கேக்க வேணாம்.. நாங்க அடுத்த வேலைகளை ஆரம்பிக்கிறோம்.. ன்னு சொல்ல.. ப்ரியா வெக்கத்தில் தலை குனிய.. ஹரி அதை வெகுவாக ரசித்துக்கொண்டு இருந்தான்.. அதன் நேரம் ஹரியின் அப்பா மேலே வந்து இவர்களுடன் இணைய..
என்ன ஹரி.. எதுக்காக நாங்க காலைல பொண்ணு பாக்கற வேலைய வச்சோம் தெரியுதா..
என்னப்பா.. இது கூட தெரியாதா.. அதுவும் இல்லாம யாருக்குமே லீவே இல்லை.. அதான் காலைலே பிக்ஸ் பண்ணீங்க..
டேய்.. நாங்க பிக்ஸ் பண்ண பிளான் எனக்கே சொல்றீங்களா. ன்னு ஹரியோட அம்மா கேக்க..
என்னமா இப்ப.. என்ன ஆச்சு ..
அடேய். லீவ் இல்லைன்னு தானே காலைலே வச்சோம்.. இப்ப எங்க எல்லாரையும் அரை நாள் லீவ் போடா வச்சிட்டியேடா..
என்ன சொல்றீங்க எல்லாரும்.. ஒண்ணுமே புரியல..
நீங்க காலைலே ஏழரை மணிக்கு பேச ஆரம்பிச்சவங்க.. இப்ப மணி பனிரெண்டு டா.. இன்னுமா முடிக்கல.. சீக்கிரம் வாடா.. ஆபீஸ் போகணும் மீட்டிங் இருக்கு.. அம்மாவுக்கும் சிஎல் எல்லாம் காலி.. பிரியாவோட அப்பா அம்மாவும் கூட கிளம்பனும்.. ன்னு அப்பா சொல்லி முடிக்க..
பிரியா.. வெக்கத்துல அந்த இடத்த விட்டே ஓடி போயி.. அவளோட அம்மா பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டா..
புரபசர் முன்னாடி பீடி பிடிச்சி மாட்டின பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் மாதிரி நெளிஞ்சி பல்ல எஈ ன்னு காட்டிட்டு நின்னான் ஹரி..
சரிங்க.. சம்மந்தி .. நாங்க கிளம்பறோம்.. இதுக்கு மேல லேட் பண்றது அவ்ளோ நல்லா இருக்காது.. கூடிய சீக்கிரம் எல்லா வேலையும் ஆரம்பிக்கலாம் ன்னு ஹரியின் அப்பா இவனுக்கு மிகவும் தேவையான விஷயத்தை பேச..
சரி கிளம்பலாமுங்க.. டைம் ஆகிடுச்சு ன்னு ஹரியின் அம்மாவும் சொல்ல.. எல்லாரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர்..
சரிங்க குமரேசன் சார்.. நாங்க கிளம்பறோம்.. நல்லா நாளா பாத்து நிச்சயதாம்பூலம் வச்சிக்கலாம்.. கல்யாணத்த ஒரு மூணு இல்ல நாலு மாசத்துக்குள்ள முடிக்கலாம் ன்னு சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்..
பிரியாவுக்குள் பட்டாம் பூச்சி பறக்க.. ஹரிக்குள் சந்தோஷ பிரளயமே வந்தது..
அப்பா நான் கொஞ்சம் பேசணும் என ஹரி சொல்ல.. எல்லாரும் நின்றனர்..
ஹரியின் அம்மா இப்ப என்னடா பேச போற.. இவ்ளோ நேரம்தான் பேசினியே.. இன்னும் என்ன.. இதுக்கப்பறம் பேசிக்கிட்டேதானே இருக்க போறீங்க..
இல்லமா.. நான் பேசணும் சொன்னது.. பிரியா கிட்ட.. ஆனா உங்க எல்லார் எதிரிலேயும்.
பிரியா.. நீங்க சொன்னீங்களே.. உங்க அப்பா அம்மாவ நீங்கதான் கடைசி வரைக்கும் பாத்துப்பீங்க.. அதுக்கு ஒன்னும் சொல்ல கூடாதுன்னு..
ஆமா.. அது என்னோட வாழ்க்கை குறிக்கோள்..
அத பத்திதான் சொல்றேன்.. உங்கள மாதிரி.. நானும் எங்கப்பா அம்மாவுக்கு ஒரே பையன்தான்.. அப்பா அம்மாவோட பாசம் என்னன்னு எனக்கு தெரியும்.. இவங்க எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு உன்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கு முக்கியம்.. கண்டிப்பா நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இவங்க நாலு பேரயையும் பாத்துக்கலாம்.. ன்னு சொல்ல..
குமரேசனுக்கும்.. மல்லிகாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..
சார்.. உங்க பையன எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. உங்க சம்மந்தம் கிடைச்சதுல ரொம்ப சந்தோசம்.. ன்னு சொல்ல..
பிரியாவுக்கு ஹரியின் அணுகுமுறை மிகவும் பிடித்து இருந்தது.. ஹரி தன்னை சுற்றியுள்ள எல்லாரையும் சந்தோசபடுத்துறார்.. ன்னு ஹரியா பத்தி அவளோட எண்ணம் பிபி மெசின் மாதிரி உயர்ந்து போச்சு..
எல்லாரும் விடைபெற்றனர்.. ஆனால் ஹரி மட்டும் பிரியாவின் உள்ளத்தில் நுழைந்தான்.. பிரியா ஹரியின் மனதில் ஆல்ரெடி சேர் போட்டு செட்டில் ஆகி இருந்தாள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக