வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

நட்புக்குள்ளே என் காதல்,,--1



1
    பாப்பா சீக்கிரம் ரெடி ஆகு.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சு இல்ல.. அம்மாவுக்கும் இன்னைக்கு சீக்கிரம் போகணும்..

ம்ம்மா. சுச்சா வருதும்மா..

அச்சோ.. என்னடி நீ.. குளிப்பாட்டி, யுனிபாம் எல்லாம் போட்டு விட்டு ரெடியானதுக்கு அப்புறம் சொல்ற.. சரி வா சீக்கிரம்..

என செல்லமா தன் குழந்தையை தூக்கி அதற்கான அறைக்கு ஓடினாள் தமயந்தி.. ஒரு சில நிமிடத்தில் சிட்டாக பறந்து வந்த இருவரும் வாசலில் நிறுத்தி வைத்து இருந்த இரு கார்களில் ஓர் காரில் தன் குழந்தை அவர அவசரமாக சொருகி.. நிமிர்ந்தவள்

டிரைவர்.. பாப்பவ ஸ்கூல்ல இருந்து திருப்பி கூட்டிக்கிட்டு இங்க வராதீங்க..நேரா அடையார் போயிருங்க.. சரியா..

எஜமானியின் கட்டளைக்கு அடிபணிந்தவன்..காரை முடிக்கி விரட்ட ஆரம்பித்தான்..

பாப்பா செல்லும் கார் தன் கண்ணை விட்டு மறைந்ததும்.தன் காருக்கு ஓடியவள் என்ஜினை ஸ்டார்ட் செய்ததும்.. எதையோ ஞாபகம் வந்தவளாக மறுபடியும் தன் அறைக்கு ஓடி வந்தவள்..

அங்ககே கட்டிலில் கிடந்த ரமணி சந்திரனின் புதிய நாவலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் நேராக சமையல் அறைக்கு சென்று நேற்று இரவு தானே செய்து வைத்த குலாப் ஜாமூனை எடுத்தொக்கொண்டு காரில் பயணிக்க தொடங்கினாள்.

யார் இந்த தமயந்தி..

சங்கரன் என்கிற ஒரு பெரியா வியாபாரிக்கும், ஆடம்பர வாழ்க்கை பிரியை ரேவதி க்கு பிறந்த மகள் தான் இந்த தமயந்தி..

பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள் பின்பு இன்னுமொரு மிக பெரிய வியாபாரி ரகுபதி க்கும் அவருடைய மனைவி லதாவுக்கும் பிறந்த பிரபுவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டாள்..

திருமண செய்து வைக்கப்பட்டாள் என்பதை விட இரு பெரிய நிறுவனகள் இணைய (அதாவது கார்பொரேட் கொலாப்ரேசன்) ஒரு கருவியாய் பயன்படுத்தப்பட்டாள்.

அதன் வெளிப்பாடே இன்று சந்தையில் பல் பொருள் அங்காடிகள் தாங்கி நிறுக்கும் சரகு என்கிற பெயர்பலகையின் பிறப்பு. சங்கரனும், ரகுவும் சேர்ந்து உருவாக்கிய இந்த மிக பெரிய மளிகை நிருவனம் இன்று இந்தியாவின் முதன்மை ரிடையில் நிறுவனங்களில் ஒன்று.

இளவயதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பணக்கார பகட்டு வாழ்க்கையும் பிடிக்காமல், அதை தவிர்க்கவும் முடியாமல் , திருமணம் என்கிற நிகழ்வு தன் வாழ்க்கையை மாற்றும் என்று ஏமாந்தவள்.

ஆம்.. பிரபு மிக நல்லவன்... வியாபாரத்தில்,
மிக எளிமையானவன்.... வியாபாரத்தில்
வல்லவன் அதுவும் வியாபாரத்தில்,
இப்படி தன் வாழ்க்கையை வியாபாரத்துக்கு அர்பணித்து அப்பனின் சொத்தை காத்து அதை பன்மடங்காக அதிகரித்து.. தன் பணக்கார பகட்டு வாழ்க்கையை கூட அனுபவிக்க நேரம் இல்லாமல் சுற்றும் ஒரு மனிதன்..

இவனை திருமண செய்த தமயந்திக்கு கிடைத்தது.. தன் தகப்பன் வீட்டு பஞ்சு மெத்தையை விட தரமான மெத்தை, தன் தகப்பன் வீட்டு காரை விட பல மடங்கு விலை உயர்ந்த கார்.. தன் தகப்பன் வீட்டை போல் பத்து மடங்கு பெரிய வீடு.. இப்படி எதெல்லாம் அவளுக்கு விருப்பம் இல்லையோ அதெல்லாம் கிடைத்தது. ஆனால் சிறு வயது முதல் தான் ஏங்கி ஏங்கி எதிர்பார்த்த அன்பு, பாசம், பரிவு.. இது எதுவும் பெயரளவில் கூட கிடைக்கவில்லை..

எல்லாம் இருந்தும் ஏழை ஆனான் தமயந்தி..

ஆம்.. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்ற அந்த பயணம் தேனிலவு க்கு என எண்ணி புறப்பட்டவளுக்கு அந்த நாட்டின் இன்னொரு கம்னியின் பங்குதாரராக கையொப்பிடமிட வந்த ஒரு ஆணுடன் வந்து இருக்கிறாள் என்று சென்று அடைந்த பின்புதான் தெரிந்தது..
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என் கூறுவார்.. அனால் இவள் வாழ்க்கையில் காமம் என்கிற பேச்சுக்கே இடமில்லாம் போனது..
இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடும் கணவனை பற்றி தன் தாய் தந்தையிடம் கூட கூற முடியவில்லை.. அவர்களும் அவரவர் வேளைகளில் மூழ்கி இருந்தனர்.. கணவனின் தாய் தந்தையிடம் முறையிட நா கூசியது..

பொறுத்தவள், பொங்கி எழுந்தாள் ஒரு நாள்.. அதன் விளைவாக ஒரு வருடம் பல சிக்கல்களோட, பேசியும் பேசாமலும் பல சண்டைகளோடும், சில சில சச்ச்சரவுகலோடும் அவளோட வாழ ஆரம்பித்தான் பிரபு . தன் உடலை தயமந்தியின் உடலோட சில நாட்கள் சில நேரங்கள் சேர்த்து வைத்தான்.. மகிழ்ச்சியோ.. இல்லையோ.. இவளும் சேர்ந்தாள்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கணவன் தன் பக்கம் திரும்புவான் என எதிரிபார்ர்த்த தமயந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மறுபடியும் வியாபாரத்தின் அடிமையானான் பிரபு.. அவர்களின் உடல்கள் சேர்ந்து இருந்ததின் அடையாளமாக பிறந்தவள்தான் ஸ்வேதா..

ஒரு கட்டத்தில் பிரபுவும் இந்த சண்டை சச்சரவுக்கு முற்று புள்ளி வைக்க நினைத்தவன்.. தமயந்தியிடம் தன்னிலை விளக்கம் அளித்தான். தன்னால் பணத்தை மறந்து இருக்க முடியாது.. வியாபாரம் தன் மூச்சு.. அதை கவனிக்காவிட்டால் தன் மூச்சு நின்றுவிடும்.. அதனால் விலகிவிடலாம் என கூறினான்.. அதையும் ஏற்று பிரிந்து விடலாம் என நினைத்த தமயந்திக்கு முட்டுக்கட்டையாய் அவளின் பெற்றோர்கள்.. அதை ஆமோதித்து ரகுவின் பெற்றோர்கள்..

மகன், மகளின் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.. அவர்களின் பணக்கார சமுதாயத்தில் இதனால் ஏற்படும் அவமானத்தை பற்றியே கவலை.. இவரகள் பிரிந்தால் சரகு உடைந்துவிடும்.. சரகு உடைந்தால் வியாபாரத்தில் தோல்வியே காணாத அந்த இரு குடும்பமும் முதல் தோல்வியை காண நேரிடும். இப்படி பல அடுக்கடுக்கான காரணங்களுக்காக பிரிய விடாமல் தடுக்கப்பட்டாள்

காலம் செல்ல. வெறுப்பும் நெருப்பும் நிறைந்தது அவர்களின் வாழ்க்கை.. தமயந்தியின் படுக்கையை கூட பகிர முடியவில்ல அவனால் .. ஸ்வேதா அவளின் வாழ்க்கையாகி போனாள்..

காலம் செல்ல.. செல்ல.. ஸ்வேதாவும் பள்ளிக்கு செல்ல வீட்டுக்குள் முடங்கிய கிளியானாள் தமயந்தி.. அவளின் கல்லூரி தோழியின் மூலமாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவள் கணவனின் குடுமபத்தின் எதிர்ப்பை சமாளித்து வேலைக்கு சென்றுவர தொடங்கினாள்.. சிலநாளில் கணவனே அவர்களின் குடும்பத்தில் பேசினான்..

வீட்டில் அவளுக்கும் போர் அடிக்கும்.. அவ வீட்டில் இருக்கறதால் எங்களுக்கும் நிறைய சண்டை வருது.. கொழந்தையும் இப்ப ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டா.. அதானால் அவ ஜாப் க்கு போகட்டும்.. அவளுக்கும் ஒரு பொழுது போக்கா இருக்கும் என சூசகமா அவள் வீட்டில் இருந்தாள் தனக்கும் பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிவித்தான்..
இதில் கொடுமை என்னவென்றால்.. பிரபு குழந்தையை பற்றி பேசியதே அது அவளின் இந்த நான்கு வயதில் இது மூன்றாவது முறையோ.. இல்லை நான்காவது முறையோ.. ஒரு கையின் விரல்களே போதும் அதை எண்ணி முடிக்க.. 

இப்படி.. வேலைக்கு செல்வதில் இருக்கும் பிரச்சினை தானாக தீரவே.. தமயந்தியும் மகிழ்ச்சியாக சென்று வந்துகொண்டு இருந்தாள்..

இவள் வேலைக்கு சென்றதில் நிம்மதி வந்ததோ இல்லையோ.. அனால் வீட்டின் வெறுப்பு இல்லை.. பணிக்கு வருவாள்.. வீட்டுக்கு திரும்புவாள்.. குழந்தையுடன் விளையாடுவாள்.. அவளை படிக்க வைப்பாள்.. தூங்க வைப்பாள்.. ஒரு தாயாக என்னென்ன செய்ய வேணுமோ அதையெல்லாம் செய்தாள்..

பணியும், பாசமும் அவளை கொஞ்சம் சமாதன படுத்தியது.. அவ்வப்பொழுது வரும் கணவன் ஒரு வீட்டுக்குள் உலாவும் வேற்று கிரக மனிதன் ஆனான்.. எப்பொழுதாவது ஸ்வேதாவுடன் பேசுவான்.. வியாபாரத்தில் பெரும் புள்ளியானான்..

அலுவலக நட்பு அவளுக்கு சொர்கமாக தெரிந்தது.. வேளையிலும் படு கில்லாடி ஆனாள்.. கல்லூரியின் நாட்கள் மறுபடியும் வந்ததாக தோன்றியது..

இவற்றுக்கெல்லாம் மேல்.. ஹரி.. அவளின் உயிர்த்தோழன்.. 

நட்பு உலகத்தை விட பெரியது.. அனால் இவளை பொருத்தவரைக்கும் ஹரியின் நட்பே உலகம்..

ஒரு ஆசானாய், அன்பனாய் இவளின் வாழ்க்கையில் நுழைந்த இன்னுமொரு மனிதன் இந்த ஹரி..

இவள் சோர்ந்து இருந்த போதெல்லாம் அவனின் ஆறுதல் இவளின் கண்ணீரை நிறுத்தியது.. வேகமா இருந்தபோது இவனின் அறிவுரைகள் வேகத்தடையாய் இருக்கும்.. மகிழ்ச்சியாய் இருக்கும் போது அதற்க்கு காரனாய் இருப்பவன் ஹரி..

அவள் இன்று தன் கசப்பான வாழ்க்கையை மறந்து சிரிப்பதற்கும், வேலையில் சிறந்து விளங்குவதற்கும் காரணமானவன்... ஹரி.. ஹரி.. ஹரி.

அலுவலகத்தின் பல பேருக்கு பொறாமை இவர்களின் பொறாமையை பார்த்து.. இருந்தா இவர்களை போல் இருக்க வேண்டும்.. என்கிற அளவுக்கு மிகவும் நாகரீகமான ஒரு நண்பர்கள்.

அவனை காணத்தான் இவளும் வேக வேகமாக போய்க்கொண்டு இருக்கிறாள்.. அலுவலகத்தில் சந்திக்க போகிறார்கள் என்றாலும் நட்பு அவளை வேகப்படுத்தியது.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக